Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களே…. விடுமுறைனு நினைக்காதீங்க…. அமைச்சர் சொன்னது என்ன?….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை விடுமுறை என்று நினைக்காமல் பொதுத்தேர்வு மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பாடம் குறித்து அரசு சார்பாக யூடியூபில் 8,000 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், அதனை பார்த்து கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்கள் பாடம் கற்கலாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |