Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் நலமுடன் இருக்கிறார்களா…..? பள்ளி கல்வித்துறையின் திடீர் உத்தரவு…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்…..!!!!

பொதுவாக பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல் பணியை தவிர்த்து மக்கள் கணக்கெடுப்பு பணி, வாக்காளர் விவரம் சேகரிப்பு மற்றும் தேர்தல் பணி போன்றவைகளும் கொடுக்கப்படும். அந்த வகையில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு புதிதாக ஒரு பணியினை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் உடல்நலம் குறித்த விவரங்களை சேகரித்து எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வைட்டமின் குறைபாடு, பல் நோய்கள், காசநோய், கண் பார்வை பாதிப்பு, ரத்த சோகை மற்றும் மாணவர்களின் கை, கால், தலைகள் போன்றவைகள் பெரிதாக இருக்கிறதா, சிறிதாக இருக்கிறதா என்பதை கண்டுபிடித்தல், கண்கள் ரெண்டும் ஒரே அளவில் இருக்கிறதா, ஒரு வாரத்தில் மாணவர்கள் என்னென்ன உணவு சாப்பிட்டார்கள் போன்ற 30-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை செய்து ஆசிரியர்கள் எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்கள் நாங்கள் மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக சொல்லிக் கொடுப்பதா, இல்லையெனில் மற்ற பணிகளை செய்வதா என்று முணுமுணுத்துக் கொள்கின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாணவிகளின் மாதவிடாய் குறித்த தகவல்களை சேகரித்து எமிஸ் செயலியில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறியதற்கு கடும் விமர்சனம் கிளம்பியதால், அந்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை பாதியிலேயே கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |