Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் மீது கழிவுநீர்! தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த அவமானம்!… அத்துமீறிய திமுக கவுன்சிலரின் கணவர்?… அதிர்ச்சி…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது. இவற்றில் 60-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் பின்புறமுள்ள பாஸ்கர் என்பவரது வீட்டில் இருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளியிலுள்ள செடிக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றனர்.

அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்தவர் கழிவு நீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார். இது தொடர்பாக மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, கோபமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டியுள்ளார். இந்த சம்பவம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி போலீஸ் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட பாஸ்கரை கண்டித்துள்ளனர். அத்துடன் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர்.

அப்போது மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17வார்டு உறுப்பினர் திமுக-வைச் சேர்ந்த ரமணி என்பவரின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நீங்கள்ளா யார்டா, இங்க எதுக்குடா பிரச்சன பன்றிங்க, நீங்க இதையெல்லாம் கேட்ககூடாது என போதையில் ஒருமையில் பள்ளி குழந்தைகளின் முன்பாகவே அனைவரையும் அநாகரீகமாக பேசியுள்ளார்.

அதற்கு தலைமை ஆசிரியர் நீங்க தப்ப தட்டிகேட்க வேண்டியது தானே என்று கூறினார். இந்நிலையில் கோபத்தின் உச்சத்தில் சென்ற கவுன்சிலர் கணவர் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தைநெறித்து தாக்கிவிட்டு அங்கிருந்து செல்கிறார். தலைமை ஆசிரியரை பள்ளி குழந்தைளின் கண் முன்னே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அருகிலிருந்தவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |