பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு மண் சிற்பங்கள் கண்காட்சியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போதை ஒழிப்பு தொடர்பான ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: “போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை கொண்டாடி வருகிறோம்.
அதன் அடிப்படையில் ஆங்காங்கு அநேக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கடந்த வாரங்களில் முழுவதும் ஓவியப்போட்டி, விழிப்புணர்வு கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு இரண்டு, மூன்று இடங்களை வென்ற மாணவ மாணவியர்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் பரிசு வழங்கப்பட்டது. வார இறுதியில் பொதுமக்கள் அநேகர் வந்து போவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மணல் சிற்பம் செய்யப்பட்டு பலூன் மூலமாக விழிப்புணர்வு பதாகைகளை பறக்கவிட்டு போதை பொருள் வாரத்தை கொண்டாடி வருகிறோம்.
பள்ளி அருகாமையில் உள்ள கடைகளை சோதனை செய்து புகையிலை பொருட்களை வைத்திருந்தவர் 168 பேரும் இது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களை பள்ளி அருகில் விற்பவர்கள் மீது எச்சரிக்கை விடுக்கவும், எச்சரிக்கையை மீறி செயல்பட்டால் அவர்களின் கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகாலத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகமாகிவிட்டது.
ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த போதைப் பொருள் உபயோகிப்பது மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு போடப்பட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் மூலமாக அவர்களுக்கு உதவிட முதலமைச்சரின் ஆலோசனைப்படி பல விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.