Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி செயல்பட்ட ஆசிரியர்…. வெளியான பரபரப்பு உண்மைகள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் ராமசாமி (45). இவர் முகப்பேரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்த சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்ததால், ஸ்ரீதர் தான் வகுப்பு எடுத்த பள்ளி மாணவிகளின் செல்போன் எண்கள் அனைத்தையும் அவரது செல்போனில் சேமித்து வைத்து இருந்தார். இந்நிலையில் ஸ்ரீதர், மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மாணவிகளிடம் படிப்புக்கு தொடர்பு இன்றி அடிக்கடி செல்போனில் அழைத்து பேசியதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கியதை அடுத்து, அவரின் அத்துமீறல்கள் மற்றும் சீண்டல்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் ஆசிரியரின் அத்துமீறல்களை வெளியே கூறினால் படிப்பு பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுமோ..? என்ற பயத்தில் மாணவிகள் இதுபற்றி வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்ததாகவும் தெரிகிறது. இப்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த சூழ்நிலையில் ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நலஅலுவலரிடம் துணிச்சலுடன் முறையிட்டனர்.

பின் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆசிரியரான ஸ்ரீதர் மாணவிகளிடம் அத்துமீறி செயல்பட்டது வெளிவந்தது. அதன்பின் அவர் மீது காவல்துறையினர் போக்சோ பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் ஸ்ரீதர், மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ்-அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோக்கள் சமூகவலதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஆசிரியரின் செல்போனை பறிமுதல் செய்து வேறு ஏதாவது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா..? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |