உத்திர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ராணி லட்சுமி பாய் பயிற்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் இதுகுறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
மாணவிகள் மனம் மற்றும் உடலளவில் சுய சார்புடன் திகழ வேண்டும் என்பதுதான் இதனுடைய முக்கிய நோக்கமாகும். இந்நிலையில் டிசம்பர் மாதம் தொடங்கி 2023 -ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வரை இந்த கட்டாய பயிற்சியானது அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது தலைமையாசிரியர் ஒருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றார். இதனையடுத்து முதல் வாரத்தில் பயிற்சி நடவடிக்கைகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.