பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை ஐகோர்ட்.
சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் தற்போது நிபந்தனை ஜாமீனை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது.
இவருக்கு பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் எனவும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் சாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இவர் ஏற்கனவே ஏழு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.