பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறரர் . கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த சிறுமியை பெற்றோர்கள் பாட்டி வீட்டில் விட்டு விட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த சிறுமியை அவருடைய உறவினரான அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.
இதுபற்றி அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான கேசவன் என்பவரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து சிறுமியுடன் கேசவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த சிறுமிகைகு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியிடம் செல்போன் வாங்கி கொடுத்தது யார் என பெற்றோர்கள் கேட்டனர்.
அதற்கு அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கண்ணன் மற்றும் கேசவன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார். சிறுமியின் தாய் இது குறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கண்ணன், கேசவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.