தர்மபுரியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஆசிரியருக்கு, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது சம்பந்தப்பட்ட மாணவி அந்த ஆசிரியரின் மீது பாலியல் தொல்லை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பிற மாணவிகளின் சாட்சியும் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்துள்ளது. இதனால் நீதிமன்றம் தெளிவாக உள்ள சாட்சியங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறி ஆசிரியருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையை அதிரடியாக ரத்து செய்துள்ளது.