Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவியை கடத்தி சென்ற +2 மாணவன்…. புதருக்குள் வைத்து வெறிச்செயல்….!!!!

பள்ளி மாணவியை கடத்திச் சென்ற பிளஸ்டூ மாணவன் புதருக்குள் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பள்ளி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என்று பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலையை அதிகரித்து வருகின்றது. பெண்கள் பல்வேறு துறையில் சாதனை படைத்த போதிலும் அவர்களுக்கு எதிராக இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதே போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் மாவட்டம் பிச்சிவாரா கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் உணவு இடைவெளியின் போது பைக்கில் கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் வைத்து அவரை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மாணவியின் வீட்டின் அருகே வீசிவிட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். தற்போது அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |