கனடாவில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கனடாவின் ரொறன்ரோவில் உள்ள எட்டோகிகொக் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த 8 வயது மாணவியை 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் தோளில் தூக்கி கொண்டு கடத்த முயன்றுள்ளான். அதனைக் கண்ட மற்ற மாணவிகள் சத்தம் போட்டதால் பயந்துபோய் உடனே மாணவியை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டான் .
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும் கடத்த முயன்ற இளைஞனை தீவிரமாக தேடி வருவதாகவும் அவனைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர் .