டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் cctv காட்சியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.