Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவ மாணவிகளுக்கு…. காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம்…. தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்….!!!!

பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்துள்ளார்.

மயிலாடுதுறை பகுதியில் கூறைநாடு கிராமத்தில் கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தின் கலெக்டரான லலிதா தலைமை தாங்கி உள்ளார். இவர் மாணவ மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் எம்.பி ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தின் கலெக்டரான லலிதா பேசியதாவது “மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 நகராட்சி பள்ளிகளில் 395 மாணவ மாணவிகளுக்கும், சீர்காழி நகராட்சியில் 7 நகராட்சி பள்ளிகளில் 176 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் துறை அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை நகர சபை தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர். அதோடு ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, உதவி கலெக்டர் யுரேகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார்.

Categories

Tech |