பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத தலைவலியால் அவதிப்பட்ட புவனேஸ்வரியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனாலும் அவரது தலைவலி குணமாகவில்லை.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த புவனேஸ்வரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.