Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன்…. மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை பொட்டல்குழி பகுதியில் சகாய வால்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டஸ்கின் ஜோந்த்(6) மற்றும் 1 வயது மகன் இருந்துள்ளார். டஸ்கின் ஜோந்த் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளான். இதனை அடுத்து வீட்டிற்கு முன்பு இருக்கும் சாலையை கடக்கும் முயன்ற போது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய பென்கர் கிரோஷியோ என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |