Categories
மாநில செய்திகள்

பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!!!

பள்ளி  மாணவர் தீக்‌ஷித் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் உட்பட மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பில் தீக்‌ஷித் என்ற மாணவர் படித்து வந்தார்.கடந்த  மார்ச் 28ஆம் தேதி அந்த பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்  மாணவர் தீக்‌ஷித் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர் பூங்காவனம் வாகனத்தை பின்னோக்கி ஓட்டிச் சென்ற நிலையில் பின்னால் மாணவர் தீக்‌ஷித் நடந்து வந்ததை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

பூங்காவனம் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதால் வாகனம் மாணவன் தீக்ஷித் மீது வாகனம் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தியை காவல்துறையினர்  கைது செய்தனர். ஓட்டுநர் பூங்காவனம் சர்க்கரை நோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஞானசக்தியை சிறையில் அடைத்தனர். பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி போன்றோரிடம்  வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணைவிசாரணையில் பூங்காவனம் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதும், காது கேட்கும் திறன் குறைவாகவே இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்குப் பின்னர் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.விபத்து பற்றி  நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி அந்த பள்ளியில் பணியாற்றிய முதல்வர் உட்பட மூன்று பேரை பணி நீக்கம் செய்து உத்தரவு வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |