பள்ளி வாகனங்களை இயக்கும் முறை குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் பள்ளி வேன் மோதிய விபத்தில் 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதன்காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது பள்ளி வாகனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை ஓட்டும்போது சினிமா பாடல்களை கேட்கக்கூடாது.
மாணவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிடுவதற்கு உதவியாளர்களை நியமிக்க வேண்டும். அதிக அளவில் மாணவர்களை வாகனங்களில் ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். மேலும் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்ற நபரையே பள்ளி வாகன ஓட்டுநராக நியமிக்க வேண்டும். இதனையடுத்து பள்ளி வாகன ஓட்டுனர் சீருடை அணிந்து, அடையாள அட்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.