Categories
மாநில செய்திகள்

பள்ளி விடுதிகளில் இனி கல்லூரி மாணவியருக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரை சேர்த்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 367 பள்ளிகளில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் ஏற்கனவே தங்கிப் பயிலும் மாணவியரின் ஊரு விளைவிக்காத வகையில் இட வசதியை கருத்தில் கொண்டு கல்லூரி பயிலும் மாணவிகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் செலவினத்திற்காக ரூ.48.36 லட்சம் நிதியை தமிழக அரசு விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தடையின்றி தங்கி படிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

Categories

Tech |