Categories
தேசிய செய்திகள்

பள்ளி வேனில் LKG சிறுமியிடம்….. அத்துமீறிய வேன் டிரைவர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!!

மத்திய பிரதேசத்தில் எல்கேஜி படிக்கும் சிறுமியிடம் வேன் டிரைவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் போபாலில் உள்ள தனியார் கிண்டர் கார்டன் பள்ளியில் எல்கேஜி படிக்கும் அந்த மாணவி, கடந்த வாரம் பள்ளியில் இருந்து பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளார். ஆனால் சிறுமியை இறக்கி விட தாமதம் ஆகி உள்ளது. சிறுமியின் உடைகளும் மாற்றப்பட்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், விசாரித்ததில் அந்த சிறுமி வேன் டிரைவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

பள்ளி வேனுக்குள் அதுவும் பெண் உதவியாளர் கண் முன்னே இந்த கொடூரம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் வேன் டிரைவர் கிஷோர் குமார் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |