சென்னை மாவட்டத்தில் புழுதிவாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஜெயபால் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 பள்ளி மாணவர்களை வேனில் ஏற்றுக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். அந்த சமயத்தில் சாலையோரம்மாக நின்றிருந்த கார் மீது வேன் மோதி உள்ளது. இதனால் வானில் இருந்த மாணவர்கள் அனைவரும் அலறியுள்ளனர். மேலும் இரண்டு மாணவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் வேன் டிரைவரிடம் சண்டை போட்டுள்ளனர். அந்த சமயத்தில் அவர் குடிபோதையில் இருந்ததாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் குடிபோதையில் உள்ளவரை பள்ளி வாகனத்தை ஓட்ட அனுமதிக்கலாமா? என வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் வேன் டிரைவரை பணியிலிருந்து நீக்குவதாக உறுதியளித்த பின் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இது குறித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய பள்ளி வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.