Categories
மாநில செய்திகள்

பள்ளி வேன் மோதி மாணவன் பலியான விவகாரம்…. பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு…!!!!

பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் வெற்றிவேல்-ஜெனிஃபர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீக்ஷித் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆழ்வார் திருநகரி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 28-ம் தேதி தீக்ஷித் பள்ளி வளாகத்திற்குள் வேனை விட்டு இறங்கி நிற்கும்போது திடீரென பள்ளி வேன் மாணவன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சிறுவன் தீக்ஷித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக பள்ளியின் முதல்வர் தனலட்சுமி, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், குழந்தைகள் கவனிப்பாளர் ஞானசக்தி, வேன் ஓட்டுநர் பூங்காவனம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷிடம் 10 கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த கேள்விகளுக்கு 2 நாட்களில் பதிலளிக்க வேண்டுமென காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இது தொடர்பான வழக்கில் ஞானசக்தி மற்றும் பூங்காவனம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |