Categories
தேசிய செய்திகள்

பழங்கால பொருட்கள் விற்பதாக கூறி 10 கோடி மோசடி… பலே மோசடி மன்னன் கைது…!!!

கேரளாவில் பழங்கால பொருட்கள் இருப்பதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள களூர் பகுதியில் பழங்கால பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் மோம்சன் மாவுங்கள். இவர் பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கூறி வந்துள்ளார். இவரது வீடும் கலை பொருட்கள்,  விற்பனை நிலையமும் மிக பிரமாண்டமாக இருப்பதால் இங்கு பல முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இவர் விற்பனை செய்த பல பொருட்கள் போலியானது என தெரியவந்தது. இது பற்றி பலரும் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இதுபோல் மோன்சன் மீது கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பாபு, சித்திக் , முகமது ஆகியோர் முதல் மந்திரி விஜயன் அலுவலகத்துக்கு ஒரு புகார் அனுப்பினர்.

அதில் மூன்று மாதங்களுக்கு வட்டி இல்லாமல் தொழில் தொடங்க கடன் தருவதாகவும், இதற்கு 10 கோடி தரவேண்டும் எனவும் கூறினார். அதை நம்பி நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம்.
ஆனால் அவர் கூறியபடி எங்களுக்கு தொழில் செய்ய கடன் தரவில்லை. மேலும் நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர். இதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |