திருக்கனூர் அருகேயுள்ள செட்டிபட்டி கவுன்சிலர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்ததை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கனூர் அருகே உள்ள செட்டிபட்டு கிராம பஞ்சாயத்திலுள்ள செட்டிபட்டு, , மணலிப்பட்டு கிராமங்களில் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியை பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இதற்கு மிகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியிடப்பட்ட முதல் பட்டியலில் செட்டிபட்டு கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதே மாதம் 23 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அப்பகுதியானது பட்டியல் இன பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலர் பதவியை, 4 குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் பழங்குடியினருக்கு ஒதுக்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.