Categories
தேசிய செய்திகள்

பழங்குடியினர் சிறுமி தற்கொலை… காங்கிரஸ் தலைவர்கள் ஏன் பாஸ்தருக்கு செல்லவில்லை?… பா.ஜனதா எம்.பி. கேள்வி…!!!

உத்திரபிரதேசத்தில் எந்த ஒரு அடக்குமுறை சம்பவமும் நடைபெறவில்லை என்று பாரதிய ஜனதா எம்பி மோகன் மாண்டவி கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை விசாரணை செய்து கொண்டிருக்கிறது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஏற்று ஆஜராகிய பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், தங்களின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் சடலத்தை எரித்து விட்டதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என அவர்களின் தரப்பு வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகின்ற நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நடக்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் எந்த ஒரு அடக்குமுறை சம்பவமும் நடக்கவில்லை என்று பாரதிய ஜனதா எம்பி மோகன் மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தீஸ்கரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் அவர் கூறுகையில், “நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக காட்டவே காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் உத்திரபிரதேசம் செல்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பாஸ்தருக்கு ஏன் செல்லவில்லை?.அங்கு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இன சிறுமி தற்கொலை செய்து கொண்டதை ஏன் காங்கிரஸ் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை”என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Categories

Tech |