Categories
மாநில செய்திகள்

பழங்குடியின ஆதிதிராவிட மாணவர்களுக்கு…. மாதம் ரூ.15,000 சம்பளம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

BSC முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவசமாக தாட்கோ மூலம் மெடிக்கல் கோடிங் ட்ரைனிங் பயிற்சி அளித்து பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ளது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளங்கலை அறிவியல் முடித்த மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இலவசமாக medical coding training குறுகிய கால பயிற்சிக்காக அளித்து பல்வேறு மருத்துவ துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியராக இருக்க வேண்டும். குறிப்பாக இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் 60% பெற்றிருக்க வேண்டும். மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணத் தொகை 15000 தாட்கோ வழங்கிவிடும்.பயிற்சி முடித்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ஐஎஸ்ஓ தரத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் 100% மருத்துவத்துறை மென்பொருள் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தரும்.

மாணவர்கள் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்களுக்கு பிறகு வீட்டில் இருந்தபடியே அந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணியில் மேற்கொள்ளலாம்.ஆரம்பத்தில் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமும் அதன் பிறகு 70 ஆயிரம் ரூபாய் வரை பதவி உயர்வு அடிப்படையில் மாத ஊதியம் பெறலாம். இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com என்ற முகவரி பக்கத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |