இந்தியாவில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததால் தான் நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களை சந்தித்து பேசினார். அப்போது நரிக்குறவர் இன மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அதாவது மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பழங்குடியின பட்டியலில் தங்களை சேர்த்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.
அதோடு மாவட்ட நிர்வாகம் நரிக்குறவர் இன மக்களுக்காக வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்ததற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 506 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 23 ஆயிரத்து 472 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள தாகவும், மீதமுள்ள நபர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.