Categories
தேசிய செய்திகள்

பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்….. பெரும் பரபரப்பு Video …..!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின பெண்ணை, கணவர் மற்றும் உறவினர்கள் முன்பு கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜஹா புவாஎன்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனை விட்டு பிரிந்து 9 மாதம் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

பின்பு அவரைப் பிரிந்து மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு வந்து அவருடன் வாழ தொடங்கினார். அந்த ஆத்திரத்தில் முகேஷ் தனது கூட்டாளிகள் ஐந்து பேரை அழைத்து அந்த பெண் வசிக்கும் வீட்டிற்குள் நுழைந்தார்.பின்னர் அந்தப் பெண்ணை கணவர் மற்றும் உறவினர் முன்னரே கட்டாயமாக வெளியே இழுத்து வந்து சாலையில் வைத்து கொடூரமாக தாக்கி ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தினார்.

தடுக்க முயற்சித்தவர்களையும் அவர் தாக்கியுள்ளார் .அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.தாக்குதல் நடத்திய முக்கியம் அந்த பெண்ணும் ஒரு பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |