Categories
மாநில செய்திகள்

பழங்குடியின மக்கள் தொழில் தொடங்க ரூ.50 லட்சம் நிதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளும் வழங்கி வருகிறது. இந்நிலையில் பழங்குடியின மக்கள் தொழில் தொடங்க 50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 100 பழங்குடியின நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு மாத களப்பயிற்சியோடு ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.சான்றிதழ் பெறுபவர்கள் சுயமாக தொழில் தொடங்க ஏதுவாக உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் 100 நபர்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 50 லட்சம் செலவில் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது பழங்குடியின மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |