Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பழத்திலேயே முதன்மையானது…” அகத்தியர் கூறும் முதல் பழம்”… இந்த விளாம்பழம்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

பழத்திலேயே முதன்மையானது என்று அகத்தியரும் முதல் பழம் இந்த விளாம்பழம். இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. கிராமங்களில் பெரும்பாலும் காணப்படும் மரங்களில் ஒன்று விளாமரம். இதில் காய்க்கும் கனிதான் விளாம்பழம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதை காண்பது என்பது அரிதாக உள்ளது. விளாம்பழத்தில் பல நன்மைகள் உள்ளது. அதைப்பற்றி இதில் பார்ப்போம்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.

முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சாப்பிட ஏற்றது. நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு இந்த விளாம்பழம் நல்ல பலன் தருகிறது.

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் பிரச்சனைகள், அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் விளாம்பழம் தீர்வாக இருக்கிறது. விளா மரத்தில் இருந்து பிசினியை எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து போகும்.

 

Categories

Tech |