பழநியை புனிதத் தலமாக அறிவித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புகழ்பெற்ற புனிதத் தலம் காசி. அங்குள்ள ஆலயம் சிறியதாக இருந்தது. பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் அக்கோவில் 5 லட்சம் சதுர அடிக்கும் மேலாக விரிவுப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் கூடும் அளவுக்கு ஏராள வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் தமிழகத்தில் முக்கியக் கோவில்களை விரிவுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக பழநி கோவிலை விரிவுப்படுத்த வேண்டும். லட்சக் கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் ஆன்மிக பூமி அது. புனித நகரான காசியில் மது, இறைச்சி விற்பனைக் கடைகள் இல்லை. அதுபோல் பழநியைச் சுற்றிலும் குறிப்பிட்ட தொலைவுக்கு மது, இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதிக்க வேண்டும். புனிதத் தலமாக அறிவித்து, கழிப்பிடம், நீராடல் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.