பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே தணக்கன்குளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் வண்டி வாய்க்கால் பகுதிக்கு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் குமார், சரக்கு வேன் ஓட்டுனர்கள் பாண்டியன் மற்றும் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதேபோன்று பழனியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவர் இடும்பன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் சண்முகவேல் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இவ்விரு விபத்துகள் தொடர்பாக பழனி காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.