Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் தீவிர வாகன சோதனை… ஆவணமில்லாமல் சிக்கியவை… பறக்கும் படை பறிமுதல்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வாகன சோதனையின்போது ஆவணங்கள் இல்லாமல் வேனில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பரிசு பொருள்கள் மற்றும் பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே தெப்பம்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ. 25 லட்சம் பணம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து வேனில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அந்த பணத்தை ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ஆவணம் இல்லாத ரூ.25 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |