Categories
மாநில செய்திகள்

பழனி அருகே அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரிய வழக்கு… தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…!!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாடியூரில் அகழ்வாராய்ச்சி நடத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரன்பட்டியை சேர்ந்த நாராயணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, பழனி அருகே படியூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு பழமையான மணல் மேடு இருந்தது. அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட நாங்கள் 2017 ஆம் வருடம் 30 அடி ஆழத்திற்கு தோண்டி பார்த்தோம். ஆனால் அப்போது அங்கு மண்பாண்டங்கள், சுடுமண் பொம்மைகள், முதுமக்கள் தாழி, மனித எலும்புகள் உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் 3 முதல் 4 ஏக்கர் வரை உள்ள இந்த மணல்மேட்டை தகர்த்து அரசு மேல்நிலைப் பள்ளி கட்டப்பட்டிருக்கிறது.

அரசு அதிகாரிகள் பழமையான இடத்தை தகர்த்து கட்டிடம் கட்டி உள்ளது வேதனை அளிக்கிறது. தற்போது இந்த பகுதியில் ஏக்கர் மண்மேடு மட்டுமே மிஞ்சி உள்ளது. இந்த நிலையில் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாம் மிகவும் பழமையானவை சங்க காலத்தை சேர்ந்தவை சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியின் கண்டிடப்பட்ட பொருட்களுக்கு ஒப்பானவை. அதனால் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாடியூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டுதல் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கும். எனவே இங்கு மதிய மாநில அரசுகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. மேலும் முடிவில் நீதிபதிகள் இது பற்றிய உரிய பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |