Categories
மாநில செய்திகள்

பழனி பேருந்து நிலையத்தில் என்னப்பா நடக்குது?…. நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர் வருகை புரிகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பழனி நகராட்சி சார்பில் புதிய கட்டிடங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பக்தர்கள் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பழனி பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் வெள்ளத்துடன் காட்சி அளிக்கும். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இதற்காக பிரத்யோக கட்டிடங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

ஆனால் நகராட்சிக்கு அனுமதித்த அளவைவிட அதிகமான கடைகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஆக்கிரமிப்புகளாக மாறி பணிகளுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாக புகார்கள் வர தொடங்கியது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பழனி நகராட்சி அதிரடியில் இறங்கியுள்ளது. இதற்காக நகராட்சி ஆணையர் கமலா தலைமையில் குழு நேரடியாக களமிறங்கியது. நேற்று பழனி புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று கிழக்கு பகுதியில் உள்ள கடைகளில் முன்புறம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் கடைகளுக்கு முன்பாக மூன்று அடி வரை மட்டும் பொருட்களை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யக்கூடிய வகையில் மஞ்சள் கோடு போடப்பட்டுள்ளது. அதனை தாண்டி பொருட்கள் வைக்கக்கூடாது, கடைகளில் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்தால் நகராட்சி சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் .

Categories

Tech |