Categories
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில்…. அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் படி பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சுக்கு காபி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படியேறி வரும் பக்தர்கள் கோவிலுக்குள் வரும்போது சுக்கு காபி கொடுக்கும் திட்டம் பற்றி தெரிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த திட்டத்திற்கு பக்தர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இதனையடுத்து மலையில் அமைந்திருக்கும் பழனி முருகன் கோவிலுக்கு படிப்பாதை, ரோப் கார் மற்றும் வின்ச் ரயில் மூலமாக பக்தர்கள் சென்று கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |