திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல பக்தர்கள் மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து பக்தர்களின் பாதுகாப்புக்காக ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலில் கோவிலுக்கு செல்கின்றனர்.
Categories