Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… குவிந்த உண்டியல் காணிக்கை… எண்ணப்பட்ட மொத்த வருவாய்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள முக்கியமான ஆன்மீக தலங்களில் பழனி முருகன் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் பக்தர்கள் வெள்ளி, பணம், தங்கம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக உண்டியலில் காணிக்கையில் செலுத்துவர். கோவில் நிர்வாகம் சார்பில் இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி உண்டியல் காணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி எண்ணப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் 56 நாட்களுக்குப் பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குனி திருவிழா நடைபெற்று முடிந்த
பிறகு எண்ணப்பட்ட இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 வருவாயாக கிடைத்துள்ளது. அதேபோல் வெள்ளி 23 1/2 கிலோ, தங்கம் ஒரு கிலோ, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 148-ம் கிடைத்தது. மேலும் சங்கிலி, வெள்ளியால் ஆன வேல், பரிவட்டம், பாதம், பாத்திரங்கள், மோதிரம், நவதானியங்கள், பட்டு வேட்டி, கெடிகாரம் ஆகியவை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Categories

Tech |