திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த 25-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை கந்தசஷ்டி விழாவில் சுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெற உள்ளது. இதனை அடுத்து மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்று 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் கோவில் நடை சாத்தப்படும். மேலும் படிப்பாதையில் 11:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவதோடு, 10 மணி முதல் மின் இழுவை ரயில், ரோப்கார் சேவைகள் நிறுத்தப்படும். இதனை அடுத்து நான்கு கிரி விதிகளிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்து சின்னகுமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷன பூஜை நடைபெறுவதால் அன்றைய தினம் தங்கரத புறப்பாடு நடைபெறாது என அதில் குறிப்பிட்டுள்ளனர்.