வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 14-ஆம் தேதி வந்தார். அதன்பின் அவர் அங்குள்ள ஓட்டலில் தங்கினார். நேற்று முன்தினம் அதிகாலையில் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து சென்றார். அதன் பின் கோவிலில் நடந்த பூஜைகளில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் மலைக்கொழுந்து அம்மன், மலைக்கோவிலில் உள்ள போகர் சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று உதயகுமார் சாமி தரிசனம் செயதார். அதன் பிறகு திருஆவினன்குடிக்கு படிப்பாதை வழியாகச் சென்று தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து காரில் புறப்பட்டு அவர் சென்றார்.