நடிகர் ராகவா லாரன்ஸுடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று சென்றுள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் ரோப்கார் மூலம் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து பூஜையில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்த பிறகு உட்பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட்டுள்ளார். அதன்பின் ராகவா லாரன்ஸ் மீண்டும் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளார். இதற்கிடையில் பக்தர்கள் சிலர் ராகவா லாரன்ஸுடன் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.