திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் தற்போது சபரிமலை சீசனை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு சென்று சாமியை தரிசனம் செய்வதால் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.