Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்…. கோவில் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாடு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் பக்தர்கள் கோவில் வெளி பிரகாரத்தில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். மேலும் மின் இழுவை ரயில், ரோப்கார், படிப்பாதை ஆகியவற்றை பயன்படுத்தி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இன்று கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கட்டணம் இன்றி கிழக்கு கிரிவிதி, பாலசமுத்திரம் ரோடு பகுதியில் இருக்கும் சுற்றுலா பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம் எனவும், கிரி வீதிகளில் வாகனங்களை நிறுத்தினால் போலீசார் சார்பில் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |