திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும் இந்த ரோப் காரில் தினசரி மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வருடாந்திர பராமரிப்பு பணி கடந்த மாதம் தொடங்கியது. இதனால் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ரோப் கார் பெட்டிகள் சாப்ட்டுகள் ஆகியவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணி முடிவடைந்ததால் நேற்று முதல் ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது.அப்போது பெட்டிகளில் தலா 250 கிலோ எடைக்கு பஞ்சாமிர்தம் பெட்டிகள் வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் இயக்கத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியது, 2 வது கட்டம் சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு வல்லுநர் குழு ஆய்வு நடைபெற உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் பயன்பாட்டுக்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என்று கூறினார்.