Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவில் ரோப்கார்…. பொருத்தப்பட்ட புதிய பெட்டிகள்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

பழனி முருகன் கோவில் ரோப்காரில் பொருத்தப்பட்ட புதிய பெட்டிகளில் பக்தர்கள் ஆனந்தமாக பயணம் செய்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் வசதி இருக்கிறது. இதில் கிழக்கு கிரி வீதியில் இருக்கும் ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு தலா நான்கு பெட்டிகள் வீதம் எட்டு பெட்டிகள் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 புதிய ரோப் பெட்டிகளை வாங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி இரு வழிகளிலும் தலா 1 புதிய பெட்டியை பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

கடந்த 10-ஆம் தேதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற்ற போது 4 புதிய ரோப் பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. என் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணி நடைபெற்ற போது 2 புதிய ரோப் பெட்டிகளை பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தியுள்ளனர். தற்போது 8 புதிய ரோப் பெட்டிகளில் பக்தர்கள் ஆனந்தமாக மலைக் கோவிலுக்கு பயணம் செய்கின்றனர்.

Categories

Tech |