திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி ரோப் கார் நிலையத்துக்கு புதிதாக 10 பெட்டிகள் வாங்கப்பட்டது. ரோக்கரில் உள்ள பழைய பெட்டிகளை அகற்றப்பட்டு புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் அவற்றை பொருத்துவதில் சிக்கல் இருந்ததால் அவற்றில் சில மாற்றங்கள் செய்து பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் புதிய பெட்டிகள் பழனிக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் நேற்று ரோப் காரில் உள்ள 8 பெட்டிகளில் 2 பெட்டிகளை கழற்சி புதிதாக 2 பெட்டிகளை பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதாவது மேல் நோக்கி செல்ல ஒரு பெட்டியும் கீழ் நோக்கி வருவதற்கு ஒரு பெட்டியும் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை அடுத்து பக்தர்களின் பயன்பாட்டுக்காக மதியத்துக்கு பிறகு அந்த பெட்டிகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் அனைத்து புதிய பேட்டிகளும் பொருத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.