Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனி முருகன் பார்வையில் ADMK …! DMKவால் ஒன்னும் செய்ய முடியாது…. ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள். பழனி மலை முருகன், எதிர்க்கட்சியாக இருக்கின்ற நாங்கள்,  அவருடைய பார்வையிலே இன்றைக்கு மக்கள் வெள்ளம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. எனவே இறைவனே எங்களுக்கு இவ்வளவு அருளை கொடுத்திருக்கின்றான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த  எத்தனையோ அவதாரத்தை மேற்கொண்டுள்ளீர்கள், எந்த அவதாரமும் நிறைவேறாது.

எத்தனை அவதாரம் எடுத்தாலும், அத்தனையும் மக்கள் துணை கொண்டு வீழ்த்துவோம். பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம், அண்ணா திமுக இயக்கம். புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக உழைத்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள். இருபெரும் தலைவர்களுக்கு குடும்பம் கிடையாது; நாம்தான் பிள்ளைகள். இங்கே இருக்கின்ற மக்கள்தான் அவர்களுடைய பிள்ளைகளாக இருந்தார்கள், தன் குடும்பமாக கருதினார்.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அண்ணா திமுக இயக்கம். திமுக ஒரு கார்ப்ரேட் கம்பெனி, குடும்பத்தில் இருக்கின்றவர்களுக்கு தான் பதவி கிடைக்கும். குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு தான் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவார்கள். அண்ணா திமுக அப்படி அல்ல.  சாதாரண தொண்டர்கள் கூட தமிழகத்திலே முதலமைச்சராக வந்து இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இயங்குகின்ற ஒரே கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி என பெருமிதம் கொண்டார்.

Categories

Tech |