திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பாக பழனியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கனக ராஜ் தலைமை தாங்கினார். இதையடுத்து மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்து, ஊர்வலத்தை துவங்கி வைத்தார். பழனி தேரடியிலுள்ள நேதாஜி சிலை பகுதியிலிருந்து ஊர்வலம் துவங்கியது.
இந்த ஊர்வலத்தின் போது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 500 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக் கொடியை ஏந்தி பா.ஜ.க. நிர்வாகிகள் சென்றனர். பழனி நகரின் முக்கியமான வீதிகள் வழியே சென்ற ஊர்வலம், அடிவாரத்திலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஆனந்த் மற்றும் பா.ஜ.க.வினர் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.