Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பழமையான ஆழமரத்தை அகற்ற எதிர்ப்பு…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

பழமையான ஆழமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவடத்திலுள்ள பரணிபுத்தூர், மவுலிவாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதி குடியிருப்புகளில் பருவ மழைக்காலங்களில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் சூழ்ந்தது. இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் செல்ல மதகுகள், மழை நீர் கால்வாய்கள் அமைத்து தந்தி கால்வாயுடன் இணைக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கால்வாய்கள் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரணிபுத்தூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்றை அங்கிருந்து அகற்றிவிட்டு வேறு இடத்தில் நடுவதற்காக அதிகாரிகள் வந்தனர்.

இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு மிகவும் பழமை வாய்ந்த மரம் என்பதால் அதனை அகற்றக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அங்கிருந்த மாங்காடு காவல்துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொக்லைன் எந்திரங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் தற்போது அந்த மரத்தை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் மீண்டும் நட்டு தருவதாக தெரிவித்தும் பொதுமக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மிகவும் பழமை வாய்ந்த மரம் என்பதால் அதனை அங்கிருந்து அகற்றக்கூடாது என்பதில் பொதுமக்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் சம்மதத்துடன் அந்த மரம் அங்கிருந்து அகற்றி வேறு ஒரு இடத்தில் நடப்பட்டது.

Categories

Tech |