தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கிளப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்தியாவின் மிகப்பழமையான கிளப்புகளில் ஒன்றான செகந்திராபாத் கிளப்பில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை.
இதில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கிளப் 1887 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. செகந்திராபாத் மையப் பகுதியில் சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கிளப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.