மெக்சிகோவில் கடந்த 1880ல் தயாரிக்கப்பட்ட பழமைவாய்ந்த ஒரு ஜீன்ஸ் பேண்ட், ஏலத்தில் 76ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் மேற்குபகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஒரு ஜீன்ஸ் பேண்ட்-ஐ சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்து இருக்கின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியில் இதனை Levi’s நிறுவனம் ஆரம்ப காலக் கட்டங்களில் தயாரித்து இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்த பேண்ட்-ஐ இப்போது பெறுவது அரிய விடயம் என அப்பகுதி மக்களிடையே பிரபலமாகியதால், அது ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த பேண்ட்-ஐ பழங்கால ஆடை சேகரிப்பு ஆர்வலரான Kyle Haupert என்பவர் 76 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளார். இதை ஏலமிட்ட வீடியோ தற்போது சமூகவலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.